சபரிமலையில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தனி வரிசை ஏற்படுத்தவில்லை என புகார்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

Update: 2022-12-18 07:17 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பதால் குழந்தைகள், வயதானவர்கள் உள்பட அனைவருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த விவரம் கேரள ஐகோர்ட்டு கவனத்திற்கு சென்றது. இதைத் தொடர்ந்து வயதானவர்கள், பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு தரிசனத்திற்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும் என்று தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தவில்லை என பக்தர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் அவதி அடைந்துள்ளதாகவும் தரிசனத்திற்காக சுமார் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.



Full View


Tags:    

மேலும் செய்திகள்