6 வயதில் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்தேன் - கலெக்டர் பரபரப்பு பேச்சு

6 வயதில் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்ததாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-29 06:59 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட கலெட்கராக திவ்யா பணியாற்றி வருகிறார். திருவனந்தபுரத்தை சேர்ந்த திவ்யா டாக்டராவார். இவர் அருவிக்கரை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சபரிநாதனை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், குழந்தைகள் நலத்துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யா பங்கேற்றார். சிறுவயதில் தான் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கூறிய அவர் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

6 வயதில் தான் 1-ம் வகுப்பு படிக்கும்போது தான் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கலெக்டர் கூறுகையில், 2 ஆண்கள் அன்பாக என் அருகில் அமர்ந்தனர். அவர்கள் ஏன் என் மீது இவ்வளவு அன்புகாட்டுகிறார்கள் என்றும், ஏன் என்னை தொடுகிறார்கள் என்றும் எனக்கு தெரியவில்லை. அவர்கள் என் ஆடையை கலைந்தபோது நான் அறுவருப்பாக உணர்ந்தேன். நான் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டேன். அந்த அதிர்ச்சியில் இருந்து பெற்றோர் அளித்த ஆதரவால் மீண்டு வந்தேன். பின்னர், கூட்டமான பகுதிக்கு செல்லும்போது அந்த 2 ஆண்களும் இருக்கிறார்களா? என்று நான் பார்ப்பேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்