கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் வாகன திருட்டு வழக்கில் கைது

வாகனங்களை திருடிச் சென்று விற்பனை செய்யும் நபரை பாலக்காடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-30 09:44 GMT

பாலக்காடு:

கோவை குனியமுத்தூர் விருந்தாவனம் கே.பி.பி. நகரில் வசிப்பவர் அபுதாகிர் (வயது 47). இவர் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாக இவர் மீது வழக்கு பதிவாகி விசாரணை நடந்தது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலக்காடு பகுதியிலுள்ள ஒரு நபருடைய கார் திருட்டுப் போயிருந்தது. கார் உரிமையாளர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரைபெற்ற போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் காரை திருடி சென்றது அபுதாகிர் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலக்காடு எஸ்பி விஸ்வநாதனுக்கு தெரியவந்தது.

பின்னர் அவர் தனது உதவி அதிகாரிகளை அழைத்து அபுதாகிரை கைது செய்யும்படி உத்தரவிட்டார். அதையொட்டி அவர்கள் நேற்று மாலை அவரை கைது செய்து பாலக்காடு நீதிமன்றத்தில் ஒப்படைத்து உள்ளார்கள்.

அப்போது நடைபெற்ற விசாரணையில், இவர் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் தொடர்பு உள்ளவர் என்பது தெரிய வந்தது. பாலக்காடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வாகனங்களை திருடிச்சென்று கோவையில் பிரித்து விற்பனை செய்வது இவருடைய வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்