நிலக்கரி சுரங்க விவகாரம்: நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ்

நிலக்கரி சுரங்க விவகாரம் தமிழ்நாட்டில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-04-06 04:34 GMT

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு ஏலம் விடுவதற்கான டெண்டர் அறிவிப்பை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கரி விவகாரம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது. இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், எந்த காரணத்தை கொண்டும், டெல்டாவில் சுரங்கம் அமைக்க நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது, அளிக்காது, அளிக்காது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் விட்டது குறித்து, மத்திய நிலக்கரித்துறை மந்திரி விளக்கமளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்