லோக் ஜனசக்தி கட்சி தலைவராக சிராக் பஸ்வான் மீண்டும் தேர்வு

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Update: 2024-08-25 14:17 GMT

ராஞ்சி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் லோக் ஜனசக்தி கட்சி தலைவரான சிராக் பஸ்வானுக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிராக் பஸ்வான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அக்கட்சியின் தலைவராக இருப்பார்.

மேலும் அரியானா. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பேசிய சிராக் பஸ்வான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். அது அரசாங்கத்திடம் சரியான எண்ணிக்கை இருப்பதை உறுதிசெய்யும். ஆனாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் பொதுவில் வருவதை விரும்பவில்லை. அது ஒரு விரிசலை உருவாக்கலாம் என தெரிவித்தார்.

பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து உருவானது லோக் ஜனசக்தி கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் திறமையான தலைமையின் மீது கட்சி முழு நம்பிக்கை வைத்துள்ளது. உங்கள் வழிகாட்டுதலின் படி கட்சி புதிய உயரங்களை எட்டும் என லோக் ஜனசக்தி கட்சி டுவீட் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்