ஒரு 'இன்ச்' நிலத்தைக் கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியாது: அமித்ஷா
அசாமில் உள்ள 5 நாடாளுமன்ற தொகுதிகளில் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
லகிம்பூர்,
அசாம் மாநிலம் லகிம்பூர் நாடாளுமன்ற தொகுதியில், உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரதான் பருவாவை ஆதரித்து அமித்ஷா பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் போது ஒரு இன்ச் இந்திய நிலத்தைக் கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியாது. டோக்லாம் மோதலில் போது இந்தியா உறுதியாக இருந்தது. இதனால், 45 நாட்களுக்குப் பிறகு சீனா பின்வாங்கி சென்றது. கடந்த 1962 ஆம் ஆண்டு இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்த போது, நேரு எப்படி நடந்து கொண்டார் என்பதை அசாம் மற்றும் அருணாசல பிரதேச மாநில மக்கள் மறக்க மாட்டார்கள்" என்றார்.