பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு கொரோனாவால் குறைவான பாதிப்பு மத்திய அரசு தகவல்
பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினருக்கு கொரோனாவால் தீவிரம் குறைவான நோய் பாதிப்பே ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-
பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினருக்கு கொரோனாவால் தீவிரம் குறைவான நோய் பாதிப்பே ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 26-ந் தேதி நிலவரப்படி, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 9 கோடியே 96 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 7 கோடியே 79 லட்சம் பேர் 2 ேடாஸ் தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டுள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போட அனுமதி வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.