சத்தீஷ்கார்: பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2,055 கோடி வினியோகம்; முதல்-மந்திரி பூபேஷ் பாகல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சத்தீஷ்காரில், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2,055 கோடியை வினியோகித்து இருக்கிறோம் என முதல்-மந்திரி பூபேஷ் பாகல் இன்று கூறியுள்ளார்.

Update: 2023-08-20 16:42 GMT

ராய்ப்பூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை முன்னிட்டு டெல்லியில் 25-வது ராஜீவ் காந்தி தேசிய சத்பாவன விருது நிகழ்ச்சி ஒன்றும் இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில், சத்தீஷ்காரில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்-மந்திரி பூபேஷ் பாகல் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

அவர் கூறும்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாங்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2,055 கோடியை வினியோகித்து இருக்கிறோம். விவசாயிகள் தங்களுடைய அறுவடை காலத்தில் இந்த நிதியை பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்