சத்தீஷ்கார்: சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து - 8 பேர் பலி

சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-29 03:39 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிமிதரா மாவட்டம் பதரா கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் அருகே உள்ள கிராமமான திரையாவுக்கு நேற்று குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவு அனைவரும் சரக்கு வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கதையா என்ற பகுதி அருகே சென்றபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 5 பெண்கள் உள்பட 8 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்