சென்னை டூ மைசூரு - வந்தே பாரத் ரெயில் கட்டண விவரம்...!

சென்னை டூ மைசூரு வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-11-11 15:01 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் 5-வது வந்தே பாரத் ரெயிலை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரெயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து காலை 5.50 மணி புறப்படும் வந்தே பாரத் ரெயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இந்த ரெயில் காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலின் பயணக் கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மைசூரு:

chair car - ரூ.1200

executive car - ரூ.2295

சென்னை - காட்பாடி

chair car - ரூ.495

executive car - ரூ.950

சென்னை - கேஎஸ்ஆர் பெங்களூரு

chair car - ரூ.995

executive car - ரூ.1885

கேஎஸ்ஆர் பெங்களூரு - மைசூரு

chair car - ரூ.515

executive car - ரூ.985

Tags:    

மேலும் செய்திகள்