சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டிற்கு வரும் - நிதின் கட்கரி

சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-07 14:32 GMT

புதுடெல்லி,

சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை பெங்களூர் விரைவுச்சாலை , ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது.இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நிலையில் சென்னை - பெங்களூரு விரைவு சாலை வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மேலும் இந்த அதிவிரைவு சாலையில் சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் பெங்களூரு சென்று விடலாம் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்