சந்திரயான் 3 முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது - இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது

Update: 2023-07-15 19:13 GMT

புதுடெல்லி,

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது. ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது என பதிவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்