சந்திரயான்-3 அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரயான்-3 விண்ணில் செலுத்துவதற்கு தயாராக உள்ளது என்றும் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் இன்று கூறியுள்ளார்.

Update: 2023-06-28 13:50 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் லட்சிய நிலவு திட்டம் சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடித்துள்ளது. சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விண்கலம் ஆனது தரை இறங்குதல் (லேண்டர்) மற்றும் உலாவுதல் (ரோவர்) கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இந்நிலையில், விண்கல பரிசோதனை பணிகள் நடைபெற்று வந்தன. சந்திரயானை ஏந்தி செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும்.

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் இன்று கூறும்போது, நிலவுக்கு செலுத்துவதற்கு சந்திரயான்-3 விண்கலம் தயாராக உள்ளது. வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி முதல் 19-ந்தேதிக்குள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என கூறியுள்ளார்.

இந்தியாவின் அதிக கனம் வாய்ந்த மார்க்-3 என்ற ராக்கெட் உதவியுடன் விண்கலம் செலுத்தப்படும். இதுபற்றி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், வருகிற ஜூலை 13-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என அதிகாரிகள் கூறிய தகவலை அடிப்படையாக கொண்டு தெரிவித்து உள்ளது.

எனினும், இஸ்ரோ தலைவர் கூறும்போது, விண்கலம் முழு அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனைகள் நிறைவடைந்து உள்ளன. அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்த பின்னரே சரியான தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்