சி.இ.டி. மறுஆய்வு முடிவுகளால் மாற்றமா?- மந்திரி அஸ்வத் நாராயண் பதில்

சி.இ.டி. மறுஆய்வு முடிவுகளால் மாற்றமா என்பதற்கு மந்திரி அஸ்வத் நாராயண் பதில் அளித்துள்ளார்.

Update: 2022-10-02 21:53 GMT

பெங்களூரு: என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி) கர்நாடக தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூலை 30-ந் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2021-ம் ஆண்டு தேர்வு எழுதி மீண்டும் தற்போது மறுதேர்வு எழுதியவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சி.இ.டி தேர்வு முடிவுகளை மறுஆய்வு செய்து தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்ய நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் மறுஆய்வு செய்யப்பட்டு கடந்த 1-ந் தேதி கர்நாடக தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.


தேர்வு முடிவுகள் குறித்து மந்திரி அஸ்வத் நாராயண் பேசுகையில், பழைய மற்றும் புதிய தேர்வு முடிவுகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. முதல் 500 இடங்கள் 2 முடிவுகளிலும் ஒரே போல் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் தேர்வு எழுதி, தற்போது உள்ள தேர்விலும் கலந்துகொண்ட 14 மாணவர்கள் 501 முதல் 1000 இடங்களில் தகுதி பெற்றுள்ளனர். அதேபோல் 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரையிலான தகுதி பட்டியலில் 2021-ம் ஆண்டில் தேர்வு எழுதிய 22,022 பேர் இடம்பெற்றுள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்