ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெறுப்புடன் பார்க்கிறது: லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெறுப்புடன் பார்ப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-08-26 17:15 GMT

பாட்னா,

பீகாரில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு வெறுப்புடன் பார்க்கிறது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் இன்று தெரிவித்தார்.

பாட்னாவில் புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், "சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெறுப்புணர்ச்சியுடன் பார்க்கிறது. ஒருவரின் ஜாதி மற்றும் பொருளாதார நிலை குறித்து தெரியாமல் எப்படி கொள்கைகளை உருவாக்க முடியும்?" என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மனோஜ் மிட்டா எழுதிய சாதி பெருமை என்ற புத்தகத்தை லாலு பிரசாத் யாதவ் வெளியிட்டார். முன்னதாக பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பை உறுதி செய்த பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தும் நிதிஷ் குமார் அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பாட்னா ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்