'கர்நாடகா வறட்சியால் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை' - சித்தராமையா

வறட்சியால் மக்கள் தவித்த போது பிரதமர் ஏன் வரவில்லை? என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-03-19 08:50 GMT

பெங்களூரு,

பெங்களூருவில், தண்ணீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகளால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தேர்தல் என்றதும் பிரதமர் மோடி ஓடோடி வருவதாகவும், வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏன் வரவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிவித்ததாகவும், மாநில அரசு சார்பில் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரி கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்ட சித்தராமையா, இதுவரை கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பிரதமர் மோடி ஒரு பைசா கூட வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்