ஏர் இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்புக்கு சி.சி.ஐ. அனுமதி

ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-09-01 23:40 GMT

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் 2 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கியது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சிங்கப்பூர் ஏர்லைன்சுடன் இணைந்து கூட்டாக டாடா குழுமம் இயக்கி வந்தது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஏர் இந்தியாவும், விஸ்தாரா ஏர்லைன்சும் ஒன்றாக இணைக்கப்படுவதாக இரு நிறுவனங்களும் அறிவித்தன. அதற்கு பிரதிபலனாக ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 25.1 சதவீத பங்குகள் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையத்தின்(சி.சி.ஐ.) ஒப்புதல் கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் நேற்று ஒப்புதல் அளித்தது. ஏர் இந்தியா பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு அளிப்பது தொடர்பாக நிபந்தனையின்பேரில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்