சி.பி.எஸ்.இ. பெயரில் போலி இணையதளம்: மாணவர்களுக்கு எச்சரிக்கை

சி.பி.எஸ்.இ. பெயரில் போலி இணையதளத்தை சமூக விரோதிகள் உருவாக்கி உள்ளதாக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2022-12-16 00:48 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உஷாராக இருக்குமாறு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல https://cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன' என கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள சி.பி.எஸ்.இ., ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்