ரெயில்வே மோசடியை கண்டுபிடித்த சி.பி.ஐ.: 3 அதிகாரிகள் கைது
ஹாஜிபூரில், வர்த்தகர்களிடம் தொடர்ச்சியாக கமிஷன் பெற்றதாக ரெயில்வே சரக்கு போக்குவரத்து சேவைப் பிரிவு அதிகாரிகள் மீது புகார் எழுந்தது.
புதுடெல்லி,
கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தின் தலைமையகமான ஹாஜிபூரில், சரக்கு பெட்டிகளை கையாள, வர்த்தகர்களிடம் தொடர்ச்சியாக கமிஷன் பெற்றதாக ரெயில்வே சரக்கு போக்குவரத்து சேவைப் பிரிவு அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
அப்போது மண்டல தலைமை சரக்கு கையாளுதல் பிரிவு மேலாளர் உள்ளிட்ட 3 உயர் அதிகாரிகள் வர்த்தகர்களிடம் இருந்து தொடர்ச்சியாக மாமூல் பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட வர்த்தக நிறுவனங்களை சேர்ந்த 2 பேரும் பிடிபட்டனர். இவர்களை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.46.50 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றி உள்ளனர்.