ஜார்க்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்-மந்திரி அறிவிப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது.

Update: 2024-02-19 07:22 GMT

ராஞ்சி,

பீகாரில் கடந்த ஆண்டு ஜனவரி 7 முதல் அக்டோபர் 2 வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பீகாருக்கு அடுத்தபடியாக ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-மந்திரி சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்