காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்பட ௬ பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-07-26 15:55 GMT

பெங்களூரு: 


கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தி பெங்களூரு விதான சவுதா அருகே உள்ள கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் முன்பு நேற்று முன்தினம் தேர்வு எழுதியவர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர்.


காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவ்யா நரசிம்மமூர்த்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பவ்யா நரசிம்மமூர்த்தி உள்பட 6 பேர் மீது விதான சவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்