ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

Update: 2023-05-05 21:16 GMT

சிவமொக்கா,:-

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் பிரசாரம் செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. அதில் சிறுவர்-சிறுமிகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது என்பது முக்கியமான ஒன்றாகும். இந்தநிலையில் சிவமொக்கா நகர் தொகுதியில் உத்தம பிரஜாக்கியா கட்சி வேட்பாளர் வெங்கடேஷ் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் பிரசாரத்தில் அவர் சிறுவர்களை ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. அதன்பேரில் தொட்டபேட்டை போலீசார் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் சிவமொக்கா புறநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் சாரதா பூர்யா நாயக் போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதியில் தனது ஆதாவாளர்களுடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இந்தநிலையில் வேட்பாளர் சாரதா பூர்யா நாயக் சிறுமிகளை பிரசாரம் அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து கும்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் சாரதா பூர்யா நாயக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்