முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்- போலீசார் விசாரணை
ரிலையன்ஸ் மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாகவும் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மும்பை,
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர் ஒருவர் இன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இன்று பிற்பகல் சுமார் 1 மணிக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த அந்த மர்மநபர், அம்பானி குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை மத்திய அரசு ''இசட் பிளஸ்' வகைக்கு மேம்படுத்தியத சில தினங்களுக்கு பிறகு இந்த மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.