கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகள் திறப்பு: ஹிஜாப் அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

கா்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. ஹிஜாப் அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2022-06-09 22:23 GMT

கோப்புப்படம்: PTI

பெங்களூரு,

கர்நாடகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டு கடந்த மே மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 1 முதல் 10-ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் பாதிப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு முதல் 2 வாரங்கள் இணைப்பு பாடங்கள் எடுக்கப்பட்டன. பி.யூ. கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. அந்த சேர்க்கை பணிகள் முடிவடைந்ததை அடுத்து கர்நாடகத்தில் நேற்று பி.யூ.கல்லூரிகள் திறக்கப்பட்டன.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி மத உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து மாணவ-மாணவிகள் சீருடையில் வகுப்புக்கு வந்தனர். சில கல்லூரிகளில் மாணவர்கள் சீருடை அல்லாத ஆடைகளை அணிந்து வந்தனர். அத்தகைய மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் சீருடை அணிந்து வகுப்புக்கு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் உத்தரவிட்டனர்.

மாணவர்கள் சீருடை அணிந்து வருகிறார்களா? என்பதை கண்காணிக்க ஆசிரியர்கள் கல்லூரிகளின் நுழைவு வாயிலேயே நின்று இருந்தனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல் நாளில் ஆசிரியர்கள் சில அறிவுரைகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்