சந்திரசேகர ராவ் கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் காங்கிரசில் இணைந்தனர்

தொடர்ந்து சந்திரசேகர ராவ் கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் காங்கிரசில் இணைவதால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Update: 2024-07-05 10:21 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் (சட்டசபையின் மேலவை உறுப்பினர்கள்) நேற்று காங்கிரசில் இணைந்துள்ளனர். தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, மல்லேசம் ஆகிய 6 எம்.எல்.சி.க்களும் தெலுங்கானா காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரசில் இணைந்தனர்.

முன்னதாக பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்கள் சஞ்சய் குமார், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கடியம் ஸ்ரீஹரி, தனம் நாகேந்தர், டெல்லம் வெங்கட் ராவ் ஆகியோர் காங்கிரசில் இணந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சந்திரசேகர ராவ் கட்சியின் உறுப்பினர்கள் காங்கிரசில் இணைவதால் அக்கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்