திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தீ விபத்து; மணப்பெண் உள்பட 20 பேர் படுகாயம்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மணப்பெண் உள்பட 20 பெண்கள் படுகாயமடைந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் தாமிடி கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்கு பின் நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சியின் போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மணப்பெண் உள்பட 20 பெண்கள் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.