பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான காலை அனுமந்த வாகனத்தில் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Update: 2022-10-02 03:38 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான காலை அனுமந்த வாகனத்தில் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் பெரும்பாலான பக்தர்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் 6-வது நாளான காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கு சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, அனுமந்த வாகனத்தில் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் கலை குழுவினர் திருமால், மோகினி, மகாலட்சுமி, கிருஷ்ணர், ராமர் உள்பட தசாவதாரங்களில் வேடமிட்டு ஊர்வலமாக வந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்