சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்தார் ஜனாதிபதி

சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்தார்.;

Update:2023-09-28 00:37 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த வாரம் நடந்தது. இதில் முக்கியமாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் 20-ந்தேதியும், மாநிலங்களவையில் 21-ந்தேதியும் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த இரு அவைகளையும் ஜனாதிபதி கடந்த 26-ந்தேதி முறைப்படி ஒத்திவைத்திருப்பதாக நாடாளுமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, புதிய கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்