டெல்லி-டொரண்டோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி-டொரண்டோ விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் இந்திரா காந்தி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-05 07:15 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை 10.50 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். அதில், டெல்லியில் இருந்து டொரண்டோ நகரத்திற்கு செல்லும் 'ஏர் கனடா' விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்