மீன்கள் பிடிக்க சென்ற போது முதலை கடித்து பலியான தொழிலாளி உடல் மீட்பு
மீன்கள் பிடிக்க சென்ற போது முதலை கடித்து பலியான தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.
கார்வார்: கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் தாண்டேலி அருகே வினாயகாநகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44), தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தாண்டேலியில் உள்ள ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றார்.
அப்போது அங்கு வந்த முதலை சுரேசை கடித்து இழுத்து சென்றது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தாண்டேலி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து சுரேஷ் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று முன்தினம் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலையில் சுரேசின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர். முதலை கடித்து சுரேஷ் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து தாண்டேலி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.