பீகாரில் 5 பேரின் உடல்கள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு

பீகாரில் ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேரின் உடல்கள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-06-05 09:39 GMT



சமஸ்திப்பூர்,



பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேரின் உடல்கள் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் உடனடியாக அந்த வீட்டுக்கு சென்று உடல்களை கைப்பற்றி மருத்துவ உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அந்த வீட்டில் தற்கொலை குறிப்பு எதுவும் இருந்து கிடைக்கப்பெறவில்லை. அண்டை வீட்டுக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த குடும்பம் கடனில் சிக்கி தவித்துள்ளது என கூறப்படுகிறது. தடய அறிவியல் குழு ஒன்றும் விசாரணை நடத்த அழைக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பீகாரில் ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழந்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்