வாலிபரை தாக்கிய பி.எம்.டி.சி. பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்

வாலிபரை தாக்கிய பி.எம்.டி.சி. பஸ் டிரைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-11-25 18:45 GMT

எலகங்கா:

பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவரது மனைவி வெளிநாட்டை சேர்ந்த லாரா ஆவார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது சாலையில் சென்றபோது 2 பி.எம்.டி.சி. பஸ்களுக்கு இடையே சந்தீப் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தீப் ஒரு பஸ்சின் டிரைவரை பார்த்து ஆபாசமாக கை விரலை காட்டி உள்ளார். இதையடுத்து பஸ்சை கொண்டு அவரது மோட்டார் சைக்கிளை டிரைவர் மறித்துள்ளனர். அப்போதும் டிரைவருக்கும், சந்தீப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக மற்றொரு பஸ்சில் வந்த டிரைவர், இதனை கவனித்து, கீழே இறங்கி சென்று சந்தீப்பை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சந்தீப் எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புகாரின்பேரில் தம்பதியுடன் வாக்குவாதம் செய்த பி.எம்.டி.சி. பஸ் டிரைவரான ஆனந்த் என்பவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே விபத்து ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக சந்தீப் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்