பகவந்த் மான் இல்லத்தை முற்றுகையிட பா.ஜ.க.வினர் முயற்சி - தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீசார்

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிடுவதற்காக பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-09-22 13:45 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ஒருநாள் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நடைபெற இருந்த நிலையில், அதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுமதி வழங்கவில்லை. இதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு போட்டியாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிடுவதற்காக பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல வலியுறுத்தினர். பின்னர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அங்கிருந்தவர்களை போலீசார் விரட்டியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்