பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி குன்கா விசாரிக்கிறார்

ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா தலைமையிலான விசாரணை ஆணையம் 3 மாதத்தில் அறிக்கை அளிக்க கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Update: 2023-08-28 05:00 GMT

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்தல் நடந்தது.

இதில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. தற்போது முதல்-மந்திரி சித்த

ராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல், பிற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரசார் கூறி வந்தனர்.

பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெங்களூரு மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதா ஆட்சியில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவை வாங்கியதில் சுகாதாரத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கொரோனா காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.

நீதிபதி தலைமையில் விசாரணை

இந்த நிலையில், கடந்த பா.ஜனதா ஆட்சியில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வாங்கியதில் சுகாதார துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணை ஆணையம், முறைகேடுகள் குறித்து

விசாரணை நடத்தி, 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.சமீபத்தில் சட்டப்பேரவை பொது கணக்கு தணிக்கை குழு நடத்திய ஆய்வில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் சுகாதாரத்துறையில் நடைபெற்ற வரவு, செலவு சம்பந்தப்பட்ட தகவல்களில் ஏராளமானவித்தியாசங்கள் இருப்பது தெரியவந்தது. அதுபற்றி அரசிடம் சட்டப்பேரவை

பொது கணக்கு தணிக்கை குழு தெரிவித்தது. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி.குன்கா தலைமையில் சுகாதாரத்துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்துக்கு தேவையான அனைத்து தகவல்கள், ஆவணங்களை வழங்கவும், அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு, கர்நாடக அரசு உத்தரவு

பிறப்பித்துள்ளது. அத்துடன் அந்த ஆணையத்தில் இடம் பெற்றிருக்கும் அதிகாரிகளுக்கு தேவையான வாகன வசதிகள், சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.குறிப்பாக பெங்களூரு மத்திய பகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா மற்றும் அவரது தலைமையிலான அதிகாரிகள் ஆணைய குழுவினருக்குஅலுவலகம் அமைத்து கொடுக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள், விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சுதாகருக்கு நெருக்கடி

கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் சுகாதாரத்துறை மந்திரியாக சுதாகர் இருந்தார். அவர், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து மந்திரியாகி இருந்தார். தற்போது சுகாதாரத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதால், முன்னாள் மந்திரி சுதாகருக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழிவாங்கும் அரசியலில்ஈடுபடுவதாகவும், ஆவணங்களை வெளியிடாமலேயே விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

யார் இந்த நீதிபதி

சுகாதாரத்துறையில்நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா தலைமையில் விசாரணை நடத்த ஆணையம் அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய ஜான் மைக்கேல் டி.குன்கா, பின்னர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் ஓய்வு பெற்றார். இதற்கு முன்பு மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து அவருக்கு ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தவர் இந்த ஜான் மைக்கேல் டி.குன்கா ஆவார்.

இதன்மூலம் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா நாடு முழுவதும் பிரபலம் ஆனார் என்பது நினைவுகூரத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்