பா.ஜனதா அரசின் ஊழல்களை மூடிமறைக்க எல்லை பிரச்சினை- டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழல்களை மூடிமறைக்க மராட்டிய எல்லை பிரச்சினையை கிளப்புகிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2022-12-02 21:27 GMT

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மராட்டிய எல்லை விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். பிறரின் கருத்துக்கு நான் பதில் கூற மாட்டேன். பா.ஜனதாவினர் உள்ஒப்பந்தம் செய்து கொண்டு, கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழல்களை மூடிமறைக்க இந்த எல்லை பிரச்சினையை கிளப்புகிறார்கள். வருகிற 6-ந் தேதி மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வருவதாக தகவல் அறிந்தேன்.

இதுகுறித்து நான் அரசுக்கு ஆலோசனை கூறவில்லை. ஒருவேளை என்னிடம் அரசு ஆலோசனை கேட்டால், நான் ஆலோசனை கூறுவேன். மாநிலத்தில் நிலவும் முக்கிய விஷயங்களை மூடிமறைக்க எல்லை பிரச்சினையை பா.ஜனதாவினர் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் குழு அமைப்பு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. வேட்பாளர் பட்டியலை நாங்கள் விரைவில் அறிவிப்போம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்