பா.ஜ.க. எம்.பி. சவால்... யமுனை ஆற்றில் குளித்து காண்பித்த டெல்லி அதிகாரி

யமுனை ஆற்று நீரில் நஞ்சு கலந்து உள்ளது என்றும் அதில், குளிக்க முடியுமா? என பா.ஜ.க. எம்.பி. சவால் விட்ட நிலையில் டெல்லி அதிகாரி இந்த முடிவை எடுத்து உள்ளார்.

Update: 2022-10-30 12:33 GMT



டெல்லி,


டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையை அடுத்து கொண்டாடப்படும் சத் பூஜை பிரசித்தி பெற்றது. இதில், திரளான மக்கள் ஆண்டுதோறும் கலந்து கொள்வது வழக்கம். ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்று கூடி பூஜையில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கூறும்போது, யமுனை ஆற்று நீரானது விஷம் நிறைந்து உள்ளது. அதில் நஞ்சு கலந்துள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.

யமுனை ஆற்று நீரில் நஞ்சு கலந்து உள்ளது. அதில், குளிக்க முடியுமா? என கூறி டெல்லி நீர் வாரிய இயக்குனர் சஞ்சய் சர்மாவிடம் பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் சவால் விட்டார்.

சத் பூஜையை முன்னிட்டு ஆற்று நீரில் நுரையை போக்குவதற்காக ஒரு வகை ரசாயனம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு எம்.பி. பர்வேஷ் குற்றச்சாட்டு கூறிய நிலையில், அதற்கு எதிராக டெல்லி நீர் வாரிய இயக்குனர் சஞ்சய் சர்மா போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதன்பின்பு அவர், யமுனை ஆற்று தண்ணீர் விஷமில்லை என நிரூபிப்பதற்காக, நுரையை நீக்கும் ரசாயனங்களை ஆற்று நீரில் கலந்து, பின்னர் அதனை தலையில் ஊற்றி குளித்து காண்பித்து உள்ளார்.

இது பர்வேஷ் வர்மாஜிக்கான எந்த செய்தியும் இல்லை. அவர் நமது கவுரவத்திற்குரிய எம்.பி. இந்த தகவலானது டெல்லி மக்களுக்கானது. தவறான கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த ரசாயனம் விஷமில்லை என நிரூபிக்கவே இதனை செய்தேன்.

இந்த குளியலுக்கு பின்னர் நான் நன்றாக உள்ளேன். எனது தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த ரசாயனம் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஒப்பனை பொருட்களின் பயன்படுத்தப்படும்.

விஷமற்றது. பாலிஆக்சிபுரொப்பைலீன் வகையை சேர்ந்த ரசாயனம் என அவர் கூறியுள்ளார். அதனால், சத் பூஜையை முன்னிட்டு யமுனை ஆற்று தண்ணீரானது தூய்மையாகவும், பாதுகாப்புடனும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்