முதல்-மந்திரி சித்தராமையா குறித்து அவதூறு பேச்சு: பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான விசாரணைக்கு தடை - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-மந்திரி சித்தராமையா குறித்து அவதூறாக பேசியது குறித்து வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான விசாரணைக்கு தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-10 18:45 GMT

பெங்களூரு:

ஹரீஷ் பூஞ்சா மீது வழக்குப்பதிவு

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹரீஷ் பூஞ்சா. இவர் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது சித்தராமையா குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதாவது, சித்தராமையா 24 இந்துகளை கொன்றதாக பேசினார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் ஹரீஷ் பூஞ்சா மீது போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகார்களின்பேரில் புத்தூர், பெல்தங்கடி, பண்ட்வால் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணைக்கு தடை

இந்த நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ. கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஹரீஷ் பூஞ்சா சார்பில் வக்கீல் பிரபுலிங்க நவதாகி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், அவதூறாக பேசியதற்காக ஐ.பி.சி. 153ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வது பொருத்தமற்றது. ஹரீஷ் பூஞ்சா பேசிய பிறகு வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இதனால் போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, பா.ஜனதா எம்.எல்.ஏ. ஹரீஷ் பூஞ்சா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டின் உத்தரவால் ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ. நிம்மதி அடைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்