பாஜக தேர்தல் கலந்துரையாடல்.. சர்ச்சையில் சிக்கிய தமிழிசை சவுந்தரராஜன்
தென் இந்தியாவிற்கான பாஜகவின் 2024 தேர்தல் வியூகம் என்ற சமூக வலைதள கலந்துரையாடலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி,
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை கவர்னராக பொறுப்பு வகித்து வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன்.
ஆனால் இவர் தொடர்ந்து தனது அதிகாரத்தை மீறி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றி செயல்படுவதாகவும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கிலிருந்து "தென் இந்தியாவிற்கான பாஜகவின் 2024 தேர்தல் வியூகம்" என்ற டிவிட்டர் ஸ்பேஸில் கலந்து கொண்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.