கர்நாடக சட்டமன்ற தேர்தல்: முதல் கட்டமாக 189 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது பாஜக
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், இன்று கர்நாடகாவில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு இந்த பட்டியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.