பீகார்: நிதீஷ் குமாரின் நம்பிக்கைக்கு உரிய ஆர்.சி.பி. சிங் தனி கட்சி தொடங்க முடிவு

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேறும் ஆர்.சி.பி. சிங் தனி கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.

Update: 2022-08-06 16:34 GMT



பாட்னா,



பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்-மந்திரி நிதீஷ் குமாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தவர் ஆர்.சி.பி. சிங். 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் பதிவு செய்துள்ள அசையா சொத்துகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி கட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்து உள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும் கூறியுள்ளார்.

சட்டப்பூர்வ முறையில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலை திறன் அடிப்படையில் சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளன என அவர் கூறி அதற்கான சான்றுகளையும் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் முஸ்தாபூர் பகுதியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, தனி கட்சி உருவாக்குவது பற்றியும் கூறியுள்ளார். பீகாரில் முதல்-மந்திரியின் நம்பிக்கைக்குரியவராக சிங் இருந்த நிலையில் அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்