முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - சோனியா காந்தி வரவேற்பு

சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-09 10:04 GMT

புதுடெல்லி,

அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அளப்பரிய சாதனைகளை செய்பவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்படுகிறது. இது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

அண்மையில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்பூரி தாக்கூர், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ஆகியோருக்கு மத்திய அரசு 'பாரத ரத்னா' விருது அறிவித்தது. இந்த நிலையில், இன்று முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் ஆகியோருக்கும், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, "நாங்கள் இதை வரவேற்கிறோம்" என்று கூறிவிட்டுச் சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்