அலங்கார ஊர்தி நிராகரிப்பு: ''மத்திய ஆட்சியாளர்களின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது'' - பஞ்சாப் முதல்-மந்திரி கண்டனம்
அலங்கார ஊர்தி நிராகரிப்பு மத்திய ஆட்சியாளர்களின் குறுகிய மனப்பான்மையை காட்டுவதாக பஞ்சாப் முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்-மந்திரி பகவந்த் மான் தேசிய கொடி ஏற்றினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின தேசிய அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கெட்ட நோக்கத்தின் வெளிப்பாடு. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.
பஞ்சாப்புக்கு எதிரான இந்த பாரபட்சமான அணுகுமுறை, தேவையற்றது, விரும்பத்தகாதது. பஞ்சாப்பின் பங்களிப்பு இல்லாமல் எந்த தேசிய தினம் கொண்டாடுவதையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று அவர் பேசினார்.