பெங்களூருவில் கனமழை; கடும் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-30 13:26 GMT

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் கனமழை கொட்டியது. இதில் குடகு, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. அங்கு மழை நின்றதை அடுத்து அரசு வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட்டது.

இந்த நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்திலும் பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. அதே போல் தலைநகர் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ராமநகர், சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், பெங்களூருவில் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழையால் மைசூரூ - பெங்களூரு சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மழையால் குளம் போல் பல இடங்களில் நீர் தேங்கியுள்ள படங்கள் சமூக வலைத்தள்ங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்