பாஜக எம்.பி.யை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய ஆட்டோ டிரைவர் மீது சரமாரி தாக்குதல்

போஸ்டர்களை நீக்கவில்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

Update: 2023-11-20 21:14 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா. இவர் சமீபத்தில் கார்பூலிங் எனப்படும் கார் பகிர்வு பயண முறைக்கு ஆதரவாகவும், கார்பூலிங் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆனால், கார்பூலிங் முறையால் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்பு இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆட்டோ டிரைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, கார்பூலிங் முறையை கொண்டுவர வேண்டுமென எம்.பி. தேஜஸ்வி சூர்யா அரசு கோரிக்கை விடுத்ததை கண்டிக்கும் விதமாக பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய தனது ஆட்டோவில் ஒட்டியிருந்தார்.

இதை கண்ட பாஜக முன்னாள் கார்பரேட்டர் வெங்கடேஷ் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை அகற்ற முற்பட்டார். அப்போது ஆட்டோ டிரைவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிததால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆட்டோ டிரைவரை மீண்டும் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்