மேற்கு வங்காளத்தில் ராமநவமி வன்முறை: என்ஐஏ விசாரணை நடத்த உத்தரவு

ராமநவமி கொண்டாட்ட வன்முறை தொடர்பாக மேற்கு வங்காளத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்டது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-04-27 09:07 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் கடந்த 30-ந் தேதி ராமநவமியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக 30-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பாஜக மற்றும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜக.வை சேர்ந்த அதிகாரி ஒருவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராம நவமி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த அமைப்பு விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, அனைத்து ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை மத்திய அரசிடம் , போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ராமநவமி கொண்டாட்ட வன்முறை தொடர்பாக மேற்கு வங்காளத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்