பஞ்சாப்பில் தமிழக ராணுவ வீரர்கள் உட்பட 4 வீரர்களை சுட்டு கொன்ற சக வீரர் பகீர் வாக்குமூலம்

குன்னர் தேசாய் மோகன் என்ற நபர், ஆயுதக் கிடங்கில் இருந்து ஐஎன்சாஸ் துப்பாக்கியை திருடி சுட்டதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-04-17 08:35 GMT

பதிண்டா,

கடந்த 12-ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் தமிழக ராணுவ வீரர்கள் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் காவல்துறை தரப்பில், சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக 28 குண்டுகளுடன் இருந்த துப்பாக்கி மாயமானதாகவும், இராணுவ முகாமில் நடைபெற்ற சம்பவம் பயங்கரவாத தாக்குதலில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்ததையடுத்து, ராணுவ வீரர் தேசாய் மோகன் என்பவர் ஆயுதக் கிடங்கில் துப்பாக்கிகளை திருடி நான்கு வீரர்களை சுட்டுக்கொன்றது அம்பலமாகியுள்ளது.

நான்கு ராணுவ வீரர்களையும் தனிப்பட்ட காரணத்தினால் சுட்டுக் கொன்றதாகவும், ஆயுதக்கிடங்கில் துப்பாக்கிகளை திருடி இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து ராணுவ வீரர் தேசாய் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது உண்மையை ஒப்புக்கொண்ட குன்னர் தேசாய் மோகன்.

தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தியதால் அவர்களை சுட்டுக்கொன்றேன் என குன்னர் தேசாய் மோகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்