பசவராஜ் ஹொரட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது

தார்வாரில் பசவராஜ் ஹொரட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது.

Update: 2022-08-07 15:37 GMT

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பசவராஜ் ெஹாரட்டி எம்.எல்.சி. கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பசவராஜ் ஹொரட்டி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை, டிரைவர் ஓட்டினார். அப்போது அந்த பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக பசவராஜ் ஹொரட்டி சென்ற கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கெஞ்சப்பா என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதைபார்த்த பசவராஜ் ஹொரட்டி காரில் இருந்து கீேழ இறங்கி படுகாயம் அடைந்த கெஞ்சப்பாவை, உதவியாளர்கள் உதவியுடன் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர், மற்றொரு காரில் ஏறி சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏறபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்