உ.பி.: அரிவாள் முனையில் வங்கி கொள்ளை; அதிர்ச்சி வீடியோ வெளியீடு

ராகேஷின் மோட்டார் சைக்கிள், ஆயுதம் மற்றும் ரூ.8.54 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-03 11:37 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் பந்த் நகரில் உள்ள கிராம வங்கியில் மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் புகுந்துள்ளார். அவர், வங்கியின் காசாளரை மிரட்டி, ரூ.8.54 லட்சம் தொகையை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றார்.

இதுபற்றி தகவல் அறிந்து டி.ஐ.ஜி. தலைமையில் எஸ்.பி. வினீத் ஜெய்ஸ்வால் வங்கிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதன்பின்னர், சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் கொள்ளைக்காரரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த சூழலில், மொகல்பூர் பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராகேஷ் குப்தா என்பவர் அதிவிரைவாக பைக்கில் சென்றுள்ளார். அவரை நிற்கும்படி போலீசார் அடங்கிய குழு சைகை காட்டியது.

ஆனால், அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால், போலீசார் தற்காப்புக்காக, பதிலுக்கு துப்பாக்கியால் அவரை காலில் சுட்டுள்ளனர். இதில், ராகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதன்பின்பு, அவரை மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து, அந்த நபரின் மோட்டார் சைக்கிள், ஆயுதம் மற்றும் ரூ.8.54 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவம் நடந்து சில மணிநேரங்களில் குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்