பத்ரிநாத் பாத யாத்திரை தொடக்கம் - வேத மந்திரங்கள் முழங்க கோவில் நடை திறப்பு

நடை திறப்பை முன்னிட்டு பத்ரிநாத் கோவில் நுழைவு வாயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Update: 2023-04-27 13:03 GMT

Image Courtesy : ANI

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைப் பயணம் இந்த மாதம் தொடங்கியுள்ளது

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கான யாத்திரை தொடங்கியது. தொடர்ந்து ஏப்ரல் 25-ந்தேதி கேதர்நாத் கோவில் யாத்திரை தொடங்கிய நிலையில், ஏப்ரல் 27-ந்தேதி(இன்று) பத்ரிநாத் கோவில் யாத்திரை தொடங்கியது.

இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டது. நடை திறப்பை முன்னிட்டு பத்ரிநாத் கோவில் நுழைவு வாயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்