பத்ரிநாத் கோவில் நடை நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்

பத்ரிநாத் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.;

Update:2024-05-11 22:17 IST

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 'சார் தாம்' யாத்திரைப் பயணம் நேற்று தொடங்கியது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இதன்படி நேற்று காலை 7 மணிக்கு கேதர்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பகல் 12.20 மணிக்கு கங்கோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலின் நடை 12-ந்தேதி(நாளை) காலை 6 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு பத்ரிநாத் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீ பத்ரிநாத் கேதர்நாத் கோவில் கமிட்டி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்